வணக்கம்!
'கடவுள் வாழ்த்து' எனும் இந்தப் பதிவு ஒரு புதிய முயற்சி. மதங்களின் பெயரால் சண்டைபோட்டுக்கொண்டு, மதங்களையும், மனிதர்களையும், கடவுள்களையும் இழிவாகப் பேசிக்கொண்டும் இருக்கும் ஒரு சூழலில் 'கடவுள் வாழ்த்து' இறைவனைப் புகழவும், அதன் மூலம் மனிதத்தை உணரவும் வழிசெய்யும்.
எல்லா மதங்களும் அரிய கருத்துக்களைச் சொல்கின்றன. மேலோட்டமானவைகளைக் களைந்துவிட்டு உள்ளூரப் பார்க்கையில் மதங்கள், மனித மனங்களை நிலைப்படுத்தி, வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்து, உறவுகளை வலுப்படுத்தும் பல சிந்தனைகளைச் சொல்லியிருக்கின்றன. இத்தகைய கருத்துக்கள் இல்லாத எந்தக் கொள்கையுமே நிலையாயிருக்க முடியாது என்பதுவே இந்த வாதத்துக்குப் பலம்.
மதங்கள் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. மனித ஈடுபாடோ, தாக்கமோ இல்லாமல் இருக்கவில்லை, இதனால் சமுதாயம் மீததன அவற்றின் தாக்கங்களில் தவறுகள் நிச்சயம் நடந்திருக்கின்றன.
சிலரின் தவறுகளை முன் நிறுத்திக்கொண்டு மதங்களை விலக்குவதில், கடவுளும் விலக்கப் படுகிறார்.
'கடவுள் வாழ்த்து', பல மதங்களிலிருந்து பொன்னான ஆன்மீகக் கருத்துக்களை ஒரே இடத்தில் தரும் முயற்சியாக செயல்படவேண்டும்.
தங்கள் மதங்கள் சொல்லும் கருத்துக்களோ அல்லது எந்தவிதமான ஆன்மீகக் கருத்துக்களோ, கடவுளை, மனிதத்தை முன்னிறுத்தி, வேறெந்த மதத்தையும் தாக்காதாவாறு, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாதவாறு ஒரு பல் சமய ஆன்மீகச் சிந்தனைக் களமாக 'கடவுள் வாழ்த்து' உருவெடுக்கவேண்டும்.
இதில் இணைந்து, இறைவனை வாழ்த்தி, மனிதத்தை வளர்க்க விரும்பினால் உங்கள் பதிவின் சுட்டியோடு 2godwithlove@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மடல்செய்யுங்கள்.
Saturday, March 10, 2007
Subscribe to:
Posts (Atom)