Saturday, March 10, 2007

கடவுள் வாழ்த்து

வணக்கம்!
'கடவுள் வாழ்த்து' எனும் இந்தப் பதிவு ஒரு புதிய முயற்சி. மதங்களின் பெயரால் சண்டைபோட்டுக்கொண்டு, மதங்களையும், மனிதர்களையும், கடவுள்களையும் இழிவாகப் பேசிக்கொண்டும் இருக்கும் ஒரு சூழலில் 'கடவுள் வாழ்த்து' இறைவனைப் புகழவும், அதன் மூலம் மனிதத்தை உணரவும் வழிசெய்யும்.

எல்லா மதங்களும் அரிய கருத்துக்களைச் சொல்கின்றன. மேலோட்டமானவைகளைக் களைந்துவிட்டு உள்ளூரப் பார்க்கையில் மதங்கள், மனித மனங்களை நிலைப்படுத்தி, வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்து, உறவுகளை வலுப்படுத்தும் பல சிந்தனைகளைச் சொல்லியிருக்கின்றன. இத்தகைய கருத்துக்கள் இல்லாத எந்தக் கொள்கையுமே நிலையாயிருக்க முடியாது என்பதுவே இந்த வாதத்துக்குப் பலம்.

மதங்கள் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. மனித ஈடுபாடோ, தாக்கமோ இல்லாமல் இருக்கவில்லை, இதனால் சமுதாயம் மீததன அவற்றின் தாக்கங்களில் தவறுகள் நிச்சயம் நடந்திருக்கின்றன.

சிலரின் தவறுகளை முன் நிறுத்திக்கொண்டு மதங்களை விலக்குவதில், கடவுளும் விலக்கப் படுகிறார்.

'கடவுள் வாழ்த்து', பல மதங்களிலிருந்து பொன்னான ஆன்மீகக் கருத்துக்களை ஒரே இடத்தில் தரும் முயற்சியாக செயல்படவேண்டும்.

தங்கள் மதங்கள் சொல்லும் கருத்துக்களோ அல்லது எந்தவிதமான ஆன்மீகக் கருத்துக்களோ, கடவுளை, மனிதத்தை முன்னிறுத்தி, வேறெந்த மதத்தையும் தாக்காதாவாறு, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாதவாறு ஒரு பல் சமய ஆன்மீகச் சிந்தனைக் களமாக 'கடவுள் வாழ்த்து' உருவெடுக்கவேண்டும்.

இதில் இணைந்து, இறைவனை வாழ்த்தி, மனிதத்தை வளர்க்க விரும்பினால் உங்கள் பதிவின் சுட்டியோடு 2godwithlove@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மடல்செய்யுங்கள்.

11 comments:

கோவி.கண்ணன் said...

கடவுளை வணங்கும் உரிமையைப் பெற்றுத்தந்தவர்களைப் பற்றியும் வாழ்த்துப்பாட அனுமதி உண்டா ?
:)

சிவபாலன் said...

நல்ல முயற்சி

வாழ்த்துக்கள் சிறில்!!

சிறில் அலெக்ஸ் said...

கோவி,
ஜோக்காஅ கேட்டீங்களா அப்படீன்னா :)

சீரியசா கேட்டீங்கண்ணாலும் :)

இது ஆன்மீகம் வழியா சமுதாயத்தைத் தொடும் முயற்சி.

:)

சிறில் அலெக்ஸ் said...

உங்க பின்னூட்டங்களை தேன் பதிவில் இட்டால் தமிழ்மணத்தில் விளம்பரம் கிடைக்கும்.

VSK said...

சீரிய முயற்சி!
சிறப்புற வாழ்த்துகள்!

VSK said...

சீரிய முயற்சி!
சிறப்புற வாழ்த்துகள்!

சேதுக்கரசி said...

//உங்க பின்னூட்டங்களை தேன் பதிவில் இட்டால் தமிழ்மணத்தில் விளம்பரம் கிடைக்கும்.//

ம்.. செஞ்சிடுவோம்! வாழ்த்துக்கள்.. இதுவும் உங்க வேலை தானா? :)

சிறில் அலெக்ஸ் said...

சேதுக்கரசி,
குழுவாத்தான் ஆரம்பிக்கிறோம்.:)
ஆனா குழு முழுசா Form ஆகல

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். பிற கடவுகள்களை தாக்காதது தவிர, தனிக்கடவுளை தூக்கிப் பிடிக்காமல் இருப்பதும் முக்கியம். இல்லாவிட்டால், பல சமய anonyகள் சேர்ந்து பதிவைத் தாக்கலாம் :) சமய நூல்களில் உள்ள நல்ல கருத்துக்களை சமயத்தை முன்னிறுத்தாமல் எடுத்துரைக்கலாம். உலக சமயங்கள், தத்துவங்கள் ஆகியவற்றையும் எடுத்துரைக்கலாம். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

அரவிந்தன் நீலகண்டன் said...

நல்ல-மிக நல்ல முயற்சி சிறில். வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.

tamilraja said...

வாழ்த்துக்கள் நல்ல முயற்ச்சி
அயர்ச்ச்சி அடையாமல் தொடருங்கள்!